உறவின் வழி!

  தொண்டைமண்டல முதன்மையார்ச் சமூக வலைதளம்  

  கல்வி, வேலை வாய்ப்புச், செய்திமடல், திருமணத் தொடர்பு, வரன் தேடல்...சங்கச் செய்திகள்..
  இவற்றுடன்......
  கதை, கட்டுரை, கவிதை இலக்கியம் படைத்துப் பயன் பெறுங்கள்... படித்து இன்புறுங்கள்...பயனீட்டாளராக தொடர்பு கொள்ளுங்கள்....
  +919940061280
  கல்வி, வேலை வாய்ப்புச், செய்திமடல், திருமணத் தொடர்பு, வரன் தேடல்...சங்கச் செய்திகள்..
  இவற்றுடன்......
  கதை, கட்டுரை, கவிதை இலக்கியம் படைத்துப் பயன் பெறுங்கள்... படித்து இன்புறுங்கள்...பயனீட்டாளராக தொடர்பு கொள்ளுங்கள்....
  +918939658282
  உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ளுங்கள்

  சேக்கிழார்

  ஓரைந்து நாமமென்றும்,
  ஈரேழு லோகமென்றும்,
  மூவாறு புராணமென்றும்,
  நான்குவித வேதமென்றும்,
  ஐந்துவகைப் பூதமென்றும்,
  ஆறுகதைப் பலவும் சொல்லி,
  ஏழுலகும் தேடிவிட்டு;
  எட்டுதிக்கும் புரியாமல்,
  ஓடிநின்ற மக்களுக்கு;
  ஓரைந்து நாமத்தின்,
  உயர்வினையும் சொல்லி வைத்து,
  சிவத்தொண்டுப் புரிந்தாரின்,
  சீர்பெருமைப் தேக்கிவைத்து,
  திருத்தொண்டர் புராணத்தைத்,
  தருவாக்கித்தந்து, நிலம்;
  சைவத்தின் பெருமைதனைச்
  சாற்றிவிட எழுந்தக் கோமான்!
  குன்றத்தூர்ப் பிறந்த கவி,
  குன்றத்து விளக்காக,
  தமிழ்க்கால வரலாற்றைத்
  தவறாமல் சொன்ன கவி!
  அருண்மொழித் தேவன் அன்னான்;
  அருளெல்லாம் நீடு வாழ,
  ஆயிரம் கரம் கொண்டு,
  வாழ்கவென வாழ்த்துவேனே!

  கவிவளவன் 14. 8.1999

  CONTACT US
  Sekkizhar.net
  22, R.B. Avenue First Street,
  SEMBAKKAM, CHENNAI - 73
  Email: mail2mangai@rediffmail.com
  Ph: +919940061280

  உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
  நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
  அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்;
  மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்!
  -- சேக்கிழார்