முதன்மையார்ச் சமூகம்
முதன்மையார்ச் சமூகம் https://sekkizhar.net/wp-content/themes/corpus/images/empty/thumbnail.jpg 150 150 admin admin https://secure.gravatar.com/avatar/5993144bdcd6032c86ed4156d39fd4085e130ba5cf7d4261d0d9c4a94f40529f?s=96&d=mm&r=gதொண்டை மண்டல முதலியார் அல்லது முதன்மையார் என்பவர், காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட தொண்டை நாட்டில் கண், 24 கோட்டங்களாகப் பிரிக்கப் பட்ட ஊர்களில் வாழ்ந்த, நிலவுடைமைச் சமூகமாகும். இவர்களே பின்னாளில், இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில், சோழநாட்டிலும் பாண்டி நாட்டிலும் பெரும் நிலக்கிழாராக குடியமர்த்தப் பட்டுள்ளனர். உண்மைக்கும் நேர்மைக்கும் அறமான வாழ்வுக்கும் ஒரு காட்டாக வாழ்ந்துள்ளனர். இரண்டாம் குலோத்துங்கன் அவையில் அமைச்சராயிருந்த வரே சேக்கிழார் ஆகும். இவர், இயற்பெயர், அருண்மொழித் தேவன். குடிப்பெருமை சொல்லும் கோத்திறமாகியதே சேக்கிழார் என அவரை அடையாளப் படுத்தியது. பெரிய புராணம் எனப் படும் திருத்தொண்டர் புராணத்தை இயற்றியவர் இவரே. இவரது, பெயரும் புகழும் அளப்பறியது. சென்னையை அடுத்த குன்றத்தூரில் பிறந்தவர். அங்கு அவர் கட்டிய சிவன் கோயிலை இன்றும் காணலாம். தற்போது, அவருக்கு ஒரு மண்டபம் குன்றத்தூரில் தோற்று விக்கப்பட்டுள்ளது. இச் சமூகத்தினரில் பின்னாளில் அமைச்சுப் பிரதிநிதி யாயிருந்த ‘தளவாய்’ அரியநாயக முதலியாரும் புகழுடையவர் ஆவார். தென்னிந்திய நலவுரிமை சங்கம் எனத் தொடங்கப்பட்டு நீதிக்கட்சியாகப் பரிமளித்த நீதிக் கட்சியிலும் இச் சமூகத்தாரின், சமூக நலம் சார்ந்த பங்களிப்பு உண்டு. அடிப்படையில், நிலவுடைமைச் சமூகமாக விளங்கினாலும், அரசர் காலத்திலும், பின்னாளில் ஆங்கிலேயர் காலத்தில், செல்வாக்கோடு, நந்நிலையில் இருந்தாலும், பிற சமூகத்தவர் மேநிலை அடைதல் வேண்டி, நீதிக்கட்சி ஆட்சியில், 1921-ல் தரங்கம்பாடி முத்தையா முதலியார் என்பவரால், வகுப்புவாரி ஒதுக்கீடு திட்டம் கொண்டுவரப் பட்டு, அனைத்து சமூகத்தாரும், பயன் பெறும் நிலை வந்தது. இதுவே, இந்திய குடியரசுக்குப் பின் நாடு முழுமைக்கும் மிகவும் பின் தங்கியோருக்கு பயன் விளைவித்தது. மதுரை, சர். P.T. இராஜன், (தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் திரு பழனிவேல் தியாகராஜனின் பாட்டனார், திரு P.T.R. பழனிவேல் ராஜன் (பேரவைத்தலைவராய் இருந்தவர்) அவர்களது தந்தை, தமிழ்நாட்டு முதல்வராயிருந்த திரு மீ. பக்தவத்சலம், மத்திய அமைச்சராயிருந்த திரு ஓ.வி. அளகேசன் ஆகிய மூவரும் தஞ்சை மாவட்டத்து மாப்பிள்ளைகள். புகழ்வாய்ந்த தஞ்சை கோபால் சாமி முதலியார் இவர்களது மாமனார் ஆவார். இவர்களை யடுத்து, நாவலர் இரா நெடுஞ்செழியன், அவரது இளவல் திரு இரா. செழியன், பேராசிரியர் க. அன்பழகன் ஆகிய மூவரும் அரசியல் களம் கண்டு சிறப்பித்தவர்கள். இம்மூவரும் அன்றைய தஞ்சை மாவட்டதுக் காரர்கள். நெல்லை மாவட்டத்து, தமிழ் நேயர் இரசிகமணி T.K . சிதம்பரநாத முதலியார் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர். பெருந்தலைவர் காமராஜர் கட்டனமில்லாப் பள்ளிக் கல்வியை செயல் படுத்த, பின்புலமாக நின்றவர் திரு நெ.து. சுந்தர வடிவேலு , இவரும் இச் சமூகம் சார்ந்தவரே.
- Posted In:
- Uncategorized
Leave a Reply